பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
x

செஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசூர் பாட்டையில் தொடங்கிய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தேசூர் பாட்டை சமுதாயக்கூடம் அமைந்துள்ள பகுதியில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் குழுவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் மரக்கன்றுகளை நட்டார். மேலும் ரூ.9 ஆயிரம் மானியத்துடன் ரூ.30 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிவறை கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் குழுவினர், செஞ்சி அரசு பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story