'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வெம்பாக்கத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செய்யாறு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு', நாம் ஒன்றிணைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜூ முன்னிலை வகித்தார். ஒ.ஜோதி தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளி மாணவிகளுடன் நடந்து சென்று கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) கே.எஸ்.சிவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தி.மயில்வாகனன், பாஸ்கரன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என். வி.பாபு, ஒன்றிக்குழு உறுப்பினர் பிரகாஷ், செய்யாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள்தேவி செந்தில்குமார், பெருமாள், சேகர், கார்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மை காவலர்கள், பள்ளி மாணவிகள் என கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு ஜோதி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை வழங்கினார்.