பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் நகரப்பஞ்சாயத்து சார்பில் மஞ்சள் பை பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகரப்பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம் பேரணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்து பேரணி புறப்பட்டு மெயின் பஜார் வழியாக வடக்கு பகுதியில் உள்ள தபால் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வெங்கடேசன், சங்கர், கிரிஷ் குமார், புனிதா, தயாவதி, ஜெயராணி, சகாய ரமணி, தீபா, புனிதா சேகர், நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன், கே.ஏ.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மஞ்சள்பை மற்றும் துணியிலான தொப்பி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story