எடப்பள்ளி ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்-கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
எடப்பள்ளி ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
குன்னூர்
எடப்பள்ளி ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அறிவிப்பு பலகைகள்
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு சுற்றுலா தளங்களில் வீசி சென்று விடுகின்றனர். இவைகளை உண்ணும் காட்டு விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாவட்டம் நிர்வாகம் அறிவித்தது. சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையோங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகள்
மேலும் ஆங்காங்கே மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யும் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால் குன்னூர் அருகேயுள்ள எடப் பள்ளி ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளது.
இதன் மூலம் எடப் பள்ளி ஊராட்சி நிர்வாகம் திட கழிவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. இந்த பிளாஸ்டிக்குப்பை களை உண்ணும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
35 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
எடப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து உள்ளது.எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி பகுதிகளில் கால்நடை கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு உயிர்க்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது. கடந்த 9-ந் தேதி இறந்து போன பசுமாட்டின் வயிற்றில் இருந்்து 35 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கால்நடை மருத்துவர்களால் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டகருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை ஆக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதையே இந்தமாதிரியான கால்நடைகளின் இறப்புகள் காட்டுகிறது. குப்பைகள் அகற்றாமல் மெத்தனமாக இருக்கும் எடப்பள்ளி ஊராட்சி மீது நடவடிக்கை எடுத்து கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற இழப்புகள் ஏற்படாமல் இருக்க குப்பையை அகற்ற நிரந்தர வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.