வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்


வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
x

வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் ராயனூர் வழியாக செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து மில்கேட் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள இந்த பாசன வாய்க்காலில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப் உள்ளிட்ட அதிகளவிலான கழிவு பொருட்கள் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலந்து அசுத்தம் அடைந்துள்ளது. செல்லாண்டிபாளையம் பகுதியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story