ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
x

மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

ஹரித்ராநதி தெப்பக்குளம்

மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் தமிழகத்தின் புகழ் பெற்ற குளங்களில் ஒன்றாகும். வடமொழியில் ஹரித்ரா என்றால் மஞ்சள் என்று பொருள். இந்த குளம் ஆயிரத்து 158 அடி நீளமும், 847 அடி அகலமும் கொண்டு பரந்து விரிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. தற்போது குளத்தை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்று ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. இந்த குளத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் நீராடுகிறார்கள்.

துரித நடவடிக்கை

தற்போது ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட ஏராளமான கழிவுகள் குளத்தின் கரையோரங்களில் மிதக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை குளத்தில் வீசுவதை தடுக்கவும், கரையோரத்தில் ஒதுங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story