ஊதியூரில் பக்தர்கள் தங்கும் மண்டபம் முன் குவிந்து கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்

ஊதியூரில் பக்தர்கள் தங்கும் மண்டபம் முன் குவிந்து கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்
x

காங்கயத்தை அடுத்த ஊதியூரில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் முன்பு, சாப்பிட்டுவிட்டு வீசி சென்ற பாக்குமட்டை தட்டுகள் குவிந்து கிடப்பதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயத்தை அடுத்த ஊதியூரில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் முன்பு, சாப்பிட்டுவிட்டு வீசி சென்ற பாக்குமட்டை தட்டுகள் குவிந்து கிடப்பதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் தங்கும் மண்டபம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம்-தாராபுரம் சாலையில் ஊதியூர் பஸ் நிறுத்தம் அருகே மலை அடிவாரத்தில், பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக பழனி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விஷேச காலங்களில் ஊதியூர் வழியாக பழனிக்கு யாத்திரையாக செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் இந்த மண்டபத்தில் தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.

பாக்குமட்டை தட்டுகள்

இந்த மண்டபத்தின் முன்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் சாப்பிட்டு விட்டு பாக்குமட்டை தட்டுகளை ஆங்காங்கே வீசிச்சென்றது குவியல்,் குவியலாக கிடக்கிறது. இது பொதுமக்களை முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. மேலும் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் செயலாகவும் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட தங்கும் மண்டப நிர்வாகத்தினர் மண்டபம் முன்பு குவிந்து கிடக்கும் தட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story