போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்ய வேண்டும்


போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்ய வேண்டும் என விளையாட்டு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்

தென்காசி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்ட பிரிவு சார்பில், 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இறகு பந்து, கடற்கரை விளையாட்டு போட்டிகள், கபடி, கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, டென்னிஸ், மேசை பந்து, வளைக்கோல் பந்து, தடகளம், சிலம்பம், நீச்சல், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இதனை முன்னிட்டு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி, மாணவ - மாணவிகள் ஆகியோர் sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு தெரிவித்தார்.



Next Story