விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்து கொள்ளவேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்


விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்து கொள்ளவேண்டும் : கலெக்டர்  வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 9:51 AM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

50 வகையான போட்டிகள்

தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

பொதுபிரிவினர்(15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள்) கபடி, சிலம்பம் (கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வால் வீச்சு, மான்கொம்பு வீச்சு, இரட்டைகம்பு வீச்சு), தடகளம்(100, 1500 பெ), 3,000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்) இறகுப்பந்து, கையுந்துபந்து போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு(12 முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு(17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம்(100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 110 மீ மற்றும் 100 மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்), கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல் மற்றும் கையுந்துபந்து, மேசைப்பந்து, போட்டிகள் நடைறெ உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு

அதேபோல் மாற்றுதிறனாளர்களுக்கு(ஆண்கள் மற்றும் பெண்கள்) மாற்றுத்திறனாளி(50 மீ ஓட்டம், இறகுபந்து-5 நபர்) பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி(100மீ ஓட்டம்), மனவளர்ச்சி குன்றியோர் (100மீ ஓட்டம், எறிபந்து), செவித்திறன் மாற்றுத்திறனாளி (100மீ ஓட்டம்), அரசு ஊழியர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) கபடி, தடகளம்(100 மீ, 1,500 மீ, 3,000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்), இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய Www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பரிசுகள் விவரம்

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-வது பரிசு ரூ.2 ஆயிரம், 3-வது பரிசு ரூபாய் ஆயிரம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து முதல் பரிசு 36 ஆயிரம், 2-வது பரிசு ரூ.24 ஆயிரம், 3-வது பரிசு ரூ.12 ஆயிரம் மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54 ஆயிரம், 2-வது பரிசு ரூ.36 ஆயிரம், 3-வது பரிசு ரூ.18 ஆயிரம் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்-99435 09394, 8675773551, 74017 03485 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story