ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார்உறுதிமொழி எடுக்க வைத்தனர்.


ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார்உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பகுதிகளில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று, ஓசூர் போக்குவரத்து போலீசார் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 100-க்கும் மேற்பட்டவர்களை பிடித்தனர்.

பின்னர் அவர்களை ஓரிடத்தில் நிற்க வைத்து ஹெல்மெட் அணியாமல் சாலைகளில் செல்ல மாட்டோம். போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்போம். 3 பேர் இருசக்கர வாகனத்தில் செல்ல மாட்டோம். அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்ல மாட்டோம். போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். பிறருக்கு இடையூறு செய்யாமல் பாதுகாப்பாக சாலையில் பயணிப்போம் என உறுதிமொழி எடுக்க வைத்தனர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்கி வந்து அணிந்த பின்னரே விடுவிப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஹெல்மெட் வாங்கி வந்து போலீசாரிடம் காண்பித்து தங்களது இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு சென்றனர்.

1 More update

Next Story