நாமக்கல்லில் மலேரியா தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல்
நாமக்கல்:
உலக மலேரியா தினத்தையொட்டி நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுதா முன்னிலை வகித்தார்.
இதில் 'மலேரியா இல்லாத நிலையை உருவாக்க புதிய முயற்சிகளை செயல்படுத்துவோம்' என அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். மேலும் மலேரியா நோய் எவ்வாறு பரவுகிறது? என்பது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி, மாவட்ட பூச்சி இயல் வல்லுனர் சேகர், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story