பிளஸ்-1 தேர்வு தொடக்கம்:17,841 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 தேர்வு தொடக்கம்:17,841 மாணவ, மாணவிகள் எழுதினர்
x

நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாளான நேற்று பிளஸ்-1 தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வை 17,841 மாணவ, மாணவிகள் எழுதினர். 727 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாமக்கல்

பிளஸ்-1 தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை எழுத 18,568 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதேபோல் தனித்தேர்வர்களும் 100 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தமாக 85 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இத்தேர்வு தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், பறக்கும் படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் 1,787 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

முதல் நாளான நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிதேர்வு நடந்தது. இத்தேர்வை 17,841 மாணவ, மாணவிகள் எழுதினர். விண்ணப்பம் செய்து இருந்த 727 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வை முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையொட்டி அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story