பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x

கெங்கவல்லி அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிளஸ்-2 மாணவி

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் மேல வீதியில் வசிப்பவர் முருகேசன். இவருடைய மகள் பிரியா (வயது 17). இவர், கூடமலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர், அவருடைய பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அடக்கம் செய்ய முடிவு

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிரியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிரியா உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

இதனை அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார்விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story