சங்கராபுரம் அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீதமுடிவு


சங்கராபுரம் அருகே    விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை    பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீதமுடிவு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:41+05:30)

சங்கராபுரம் அருகே பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

விஷம் குடித்த மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்த சுதாகர் மகள் சுவாதி (வயது 17). தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுவாதி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

நேற்று காலை பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த மாணவியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மோட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, சுவாதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைகேட்ட பெற்றோர், உறவினர்கள் சுவாதியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story