பிளஸ்-1 மாணவ-மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்


பிளஸ்-1 மாணவ-மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:45 AM IST (Updated: 7 Sept 2023 12:47 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தெரிவித்துள்ளார்.

இலக்கிய திறனறி தேர்வு

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது இந்தத் தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்கள் வழங்கப்படும்.

இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்தில் அரசு பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த தேர்வுகள் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். இந்த கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஒப்படைக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story