பிளஸ்-2 தேர்வு: சாதித்த அரசு, தனியார் பள்ளிகள்


பிளஸ்-2 தேர்வு: சாதித்த அரசு, தனியார்  பள்ளிகள்
x

பிளஸ்-2 தேர்வு: சாதித்த அரசு, தனியார் பள்ளிகள்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை சேர்ந்த 3,459 மாணவர்களும், 4,740 மாணவிகள் என்று மொத்தம் 8,199 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். அதில் 3,094 மாணவர்கள், 4,487 மாணவிகள் என்று மொத்தம் 7,581 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.46 சதவீதம் தேர்ச்சி ஆகும். அதுபோன்று மாணவர்கள் 89.45 சதவீதமும், மாணவிகள் 94.66 சதவீதமும் பெற்று உள்ளனர்.

இதில் மாணவிகள் 5.21 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள அட்டகட்டி, காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு, பன்னிமடை, நாயக்கன்பாளையம், சீரநாயக்கன்பாளையம், ஜெ.கிருஷ்ணாபுரம் ஆகிய 6 அரசு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். எனவே இந்த 6 பள்ளியும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.

அதுபோன்று கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோவை வடக்கு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மாநகராட்சி பள்ளிகளும், மேலும் 15 அரசு உதவி பெறும் பள்ளி, 163 தனியார் பள்ளிகள் என்று மாவட்டத்தில் மொத்தம் 187 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story