பிளஸ்-2 மாணவர் தற்கொலை


பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x

பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி லட்சுமண நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் விமல் (வயது 18), பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் விமல் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றியதால் அவரது பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விமல் வீட்டில் இருந்த கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story