தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x

தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19-ந் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணபித்து பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story