"பிரதமர் மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் அனைத்து வீடுகளிலும் உள்ளன"


பிரதமர் மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் அனைத்து வீடுகளிலும் உள்ளன
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் அனைத்து வீடுகளிலும் உள்ளன என பாதயாத்திரை தொடக்க விழாவில் அண்ணாமலை பேசினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் அனைத்து வீடுகளிலும் உள்ளன என பாதயாத்திரை தொடக்க விழாவில் அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை பேச்சு

ராமேசுவரத்தில் நடந்த நடைபயண தொடக்க விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-

இந்த நடைப்பயணம், வெறும் அண்ணாமலையின் நடைப்பயணம் அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் நடைப்பயணம். கூட்டணி கட்சியினரின் நடைப்பயணம். இதனை ஒரு வேள்வியாக கருதுகிறோம். விவேகானந்தர் கால்நடையாக கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் வரை நடந்தே வந்தார். அதே போல் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய விவேகானந்தர் ராமேசுவரத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்றார். இந்த வார்த்தையை, மெய்ப்பட வைத்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவை பெருமைப்பட வைத்து இருக்கிறார். கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறார். அவர் ஒரு சாதாரண மனிதன்.

எனவேதான் சாதாரண மனிதர்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். பாரத தாய் போல தமிழ் தாயும் இனி விழித்து எழ வேண்டும். தி.மு.க. அரசு வெறும் ஒரு ஊழல் செய்யும் அரசாகத்தான் இருக்கிறது. ஒரு குடும்பம்தான் சம்பாதிக்கின்றனர். தமிழகத்திற்கு இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.

மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார். தமிழை நேசிக்கிறார். திருக்குறளை உலகம் எங்கும் எடுத்துச்செல்கிறார். திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதனை 100 மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

3-வது முறை

மோடியின் முகவரியாக அவரது திட்டங்கள் எல்லாம் அனைத்து வீடுகளிலும் உள்ளன. நம்மிடையே நிரந்தர பிரதமர் இருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் திங்கட்கிழமை நிதிஷ், செவ்வாய்க்கிழமை மம்தா, புதன்கிழமை கே.சி.ஆர். என ஒவ்வொரு நாளும் பிரதமர்கள் வருவார்கள்.

கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவை தன் மூச்சாக, கருவாக செயல்படுகின்ற மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். 3-வது முறை அவர் பிரதமராக அமரும் போது இந்தியா 3-வது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்த யாத்திரைக்கு தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story