என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
பொறியாளர்கள் பணி நியமனத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கும் என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி, .
வேலை வாய்ப்பு
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 299-பொறியாளர்கள் பணி நியமனத்தில் தமிழர்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், பொறியாளர்கள் பணி நியமன ஆணையை வாபஸ் பெற கோரியும் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சண். முத்துகிருஷ்ணன், செல்வ.மகஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் வரவேற்றார்.
மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
பூட்டு போடும் போராட்டம்
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்து.வைத்திலிங்கம், சக்கரவர்த்தி, வேங்கைசேகர், செல்வகுமரன், நந்தல் ,முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், அசோக்குமார் ,மாவட்ட தலைவர்கள் தடா.தட்சிணாமூர்த்தி, தேவதாஸ்படையாண்டவர், கருணாநிதி முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நெடுஞ்செழியன், ஜெகன், தொழிற்சங்க நிர்வாகிகள் திலகர், செல்வராஜ், வன்னியர் சங்க நிர்வாகி காசிலிங்கம், இளைஞர் சங்க நிர்வாகிகள், மாணவர் சங்க நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள், மற்றும் தலைவர்கள், மகளிர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் என்.எல்.சி. நிர்வாகம் பொறியாளர் பணி நியமன ஆணையை திரும்பப் பெறாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.