தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு


தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக விவாதத்திற்கு அனுமதி கேட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், இது அரசியல் செய்யும் இடமில்லை..காலையில் தான் அனுமதி கேட்டீர்கள்...நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று என்று கூறினார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாமக எம்.எல்.ஏ ஜிகே மணி, " வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கான காலக்கெடு நீட்டித்து இருக்கக் கூடாது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது" என்றார்.


Next Story