தென்காசியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தமிழகத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கி முத்து தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, வடக்கு மாவட்ட செயலாளர் சீத்தாராமன், செயற்குழு உறுப்பினர் திருமலை குமாரசாமி யாதவ், மாவட்ட தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் அய்யம் பெருமாள், சேது அரிகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது, குட்கா, கஞ்சா, மது போன்ற போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர்கள் தென்காசி சங்கர், கடையநல்லூர் சங்கர நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் கருத்த பாண்டியன், சுந்தர், கருப்பசாமி, ஒன்றிய தலைவர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story