பா.ம.க. கொடி கீழே விழுந்து கிடந்ததால் பரபரப்பு


பா.ம.க. கொடி கீழே விழுந்து கிடந்ததால் பரபரப்பு
x

பா.ம.க. கொடி கீழே விழுந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த 10-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் புதிதாக கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதில் கட்சி கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் கல்யாண் நகர் பஸ் நிறுத்தம் அருகேயும், அரணாரை பிரிவு ரோடு அருகேயும் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களில் இருந்த கயிறு மர்ம ஆசாமிகளால் அறுக்கப்பட்டு பா.ம.க. கொடி கீழே விழுந்து கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அக்கட்சியினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்தப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், விசாரணை நடத்தியும் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் மீண்டும் பா.ம.க. கொடி புதிதாக ஏற்றப்பட்டது.


Next Story