சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2023 5:00 AM IST (Updated: 22 Jun 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

காட்டூர்

மதுரையை சேர்ந்தவர் டேவிட் (வயது 21). இவர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவருடைய உறவினரான 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி கோவை வந்தார். பிறகு 2 பேரும் மருதமலை சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை டேவிட் திருமண ஆசைவார்த்தைக்கூறி கடத்திச்சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்து விட்டதாக கோவை மாநகர மத்திய மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டேவிட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story