ரவுத்திரம் படைத்து, ராஜாங்கம் நடத்து.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து


ரவுத்திரம் படைத்து, ராஜாங்கம் நடத்து.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து
x
தினத்தந்தி 11 Oct 2022 7:09 AM GMT (Updated: 11 Oct 2022 10:02 AM GMT)

தி.மு.க. தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க.வின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து, திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில், "தி.மு.க தலைவராய் மீண்டும் மகுடம் பூண்ட முதல்-அமைச்சரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரைத்தேன். எருதுபோல் உழைப்பு, ஏழைபோல் உணவு, திராவிடத் தினவு, தீராத கனவு கவலை ஏன் உனக்கு? கால்மாட்டில் கிழக்கு, சுழல்வாள் எடுத்து சூழ்ச்சியை உடைத்து, ரவுத்திரம் படைத்து, ராஜாங்கம் நடத்து" என்று கூறியுள்ளார்.


Next Story