கிருஷ்ணாபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை
கிருஷ்ணாபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை
தர்மபுரி
தர்மபுரி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் சவுக்கு தோப்பு பிரிவு சாலை பகுதியில் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story