குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராதம் வசூல்
நாமக்கல்
பள்ளிபாளையம்:
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி தலைமையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தணிக்கையில் 212 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு 33 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதிக ஆட்கள் ஏற்றிய பயணியர் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், செல்போன் பேசியபடி சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் சாலை வரியாக சுமார் 25 ஆயிரத்து 375 ரூபாயும் இணக்க கட்டணமாக ரூ.94 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. பிற குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story