பெண்ணிடம் ரூ.88 ஆயிரம் மோசடி


பெண்ணிடம் ரூ.88 ஆயிரம் மோசடி
x

பெண்ணிடம் ரூ.88 ஆயிரம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வேர்க்கோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மெரிஸ்டன் மனைவி மேரி ஜெனிபர் (வயது35). இவர் ஆன்லைன் வர்த்தக செயலி மூலம் அடிக்கடி துணிகள் ஆர்டர் செய்த வாங்கி வந்துள்ளார். இவ்வாறு வாங்கி வந்த நிலையில் அவரின் செல்போன் எண்ணிற்கு அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள் கார் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி ரூ.88 ஆயிரத்து 400 பணத்தினை அனுப்பி உள்ளார். இதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டதால் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்தவர்களை தேடிவருகின்றனர்.


Next Story