குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்


குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 5 Jun 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பேசுகையில், டாஸ்மாக் பார்கள் அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் துவங்கி, அரசு நிர்ணயம் செய்த நேரத்தில் முடித்து விடவேண்டும். விதிமீறி செயல்படும் பார்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித விதி மீறலும் இருக்க கூடாது. ரோந்தின்போது பல இடங்களில் டாஸ்மாக் மது வகைகள் விதிமீறி விற்பது தெரியவருகிறது. அவ்வாறு பிடிபடும் போது, எந்த கடையில் அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கி வந்ததாக தெரியவருகிறதோ, அந்த கடை விற்பனையாளர், கண்காணிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story