சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு: அரூர் இன்ஸ்பெக்டருக்கு சூப்பிரண்டு பாராட்டு
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலையம் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு போன்றவைகளில் மாவட்டத்தில் சிறந்த முதன்மை போலீஸ் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அரூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுவின் சிறந்த பணியை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அவ்வாறு பெறப்பட்ட பாராட்டு கேடயத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதத்திடம் அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு காண்பித்து பாராட்டு பெற்றார்.
Related Tags :
Next Story