போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை
x

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல்

அருப்புக்கோட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் மூலமாக அருப்புக்கோட்டைக்கு வந்து செல்கின்றன. விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அருப்புக்கோட்டைக்குள் வரும் வாகனங்களுக்கு பாம்பே மெடிக்கல் சந்திப்பு முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.

இந்த சந்திப்பின் மறுதிசையில் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

குவிந்த கண்ணாடி

இந்நிலையில் வாகனங்கள் வருவதை பார்த்து, வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் செல்லும் வகையிலும் ஒரு சாலையிலிருந்து மற்றொரு சாலைக்கு திரும்பும்போது அந்த சாலையில் வந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எளிதில் கவனித்து செல்லத்தக்க வகையிலும் போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதாவது இந்த சந்திப்பில் குவிந்த கண்ணாடி போக்குவரத்து போலீசாரால் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story