தமிழக-ஆந்திர எல்லை: காட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் கண்டெடுப்பு


தமிழக-ஆந்திர எல்லை: காட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் கண்டெடுப்பு
x

தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ளது இருங்குளம் காடு. தமிழக பகுதியை சேர்ந்த இங்கு, நேற்றிரவு மர்மமான முறையில் இறந்த வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பது குறித்து பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் காணாமல் போன 21 வயது வாலிபராக அவர் இருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story