வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 4 பேர் கைது
தாராபுரம் வட்டார பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 4 பேரை போலீசார் கைத செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, 2 மோட்டார்சைக்கிள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் வட்டார பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 4 பேரை போலீசார் கைத செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, 2 மோட்டார்சைக்கிள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
7 பவுன் நகை கொள்ளை
தாராபுரம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மீரா ராணி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் கோவையில் திருணமாகி விட்டது. இதனால் மீரா ராணி தாராபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள மகள்கள் வீட்டில் வசித்து வந்தார். . கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, கம்மல் என மொத்தம் 7 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தாராபுரம் போலீசில் மீரா ராணி புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொள்ளையர்ளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 4 மர்ம ஆசாமிகள் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தாராபுரம் குளத்து பஞ்சை தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் திருமூர்த்தி (23), சின்ன கடை வீதியை சேர்ந்த முகமது அலி மகன் அப்துல் ரகுமான் (34), கணபதிபாளையம் கணேசன் மகன் திணேஷ்குமார் (25), குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் மகன் அசரப்அலி (24) ஆகிய 4 பேர் என தெரிய வந்தது. இவர்கள் 4 பேரும் மீரா ராணி வீட்டிலும், அந்த பகுதியிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 பவுன் நகை மற்றும் அரிவாள், சுத்தியல், கையுறைகள், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் செய்தனர்.பின்னர் அவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாராபுரம் பகுதியில் உள்ளூர் வாலிபர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
----