நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அரங்கேறிய இரட்டைக் கொலை... காவல் நிலையம் பக்கத்திலேயே அதிர்ச்சி சம்வம்


நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அரங்கேறிய இரட்டைக் கொலை... காவல் நிலையம் பக்கத்திலேயே அதிர்ச்சி சம்வம்
x

காஞ்சிபுரம் அருகே நடந்த இரட்டைக் கொலை குறித்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23), எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 20), ஆகிய இவர்கள் இருவரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே நேற்று முன்தினம் இருந்தபோது அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம கும்பல் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மணிமங்கலம் போலீசார் மீட்டு குரோம்பேட்டை உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி சென்ற கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்த கொலைகள் சம்பந்தமாக மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை தெருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (22), மணிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19), மேற்கு மாடவீதியை சேர்ந்த லோகேஸ்வரன் (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு ஆகியோரை வரதராஜபுரம் அருகே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிமங்கலம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த மார்ச் மாதம் தேவேந்திரன் (23) என்பவர் மணிமங்கலம் பகுதியில் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இருவரையும் வெட்டி படுகொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மணிமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே நடந்த இரட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என தமிழக அரசு கூறிவரும் நிலையில் காவல் நிலையம் அருகே கொலை சம்பவங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story