போக்சோ சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு


போக்சோ சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 6 Aug 2023 5:00 AM IST (Updated: 6 Aug 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

தொப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மகாலிங்கபுரம் முதல் நிலை பெண் காவலர் புவனேஸ்வரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், புதிதாக பழகும் நபர்களிடம் பாதுகாப்பாக இருக்கவும், கெட்ட தொடுதல், நல்ல தொடுதல், உறவினர்கள் அருகில் பாதுகாப்பான முறையில் உட்காருதல் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விளக்கி கூறினார். மேலும் பள்ளிக்கு வரும் போது யாராவது தொந்தரவு செய்தால் பெற்றோர்களுக்கும், 1098 என்ற எண், 100 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இணையதளம், செல்போனை பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்த கூடாது. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோரை ஹெல்மெட் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story