சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்
சிவகங்கை
மானாமதுரை பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். தலைக்கவசம் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். அதைத்தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும். கார் ஓட்டும்போது சீட்பெல்ட் அணியவேண்டும் போன்றவை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story