வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு


வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 30 Aug 2023 3:00 AM IST (Updated: 30 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

மலைப்பாதையில் விபத்து அதிகரிப்பால், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீலகிரி

குன்னூர்

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தருகின்றனர். அவர்கள் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதை வழியாக வரும் போது, போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணியாமலும், முன்னால் செல்லும் வாகனங்களை இடதுபுறத்தில் சென்று முந்தி செல்வதுமாக உள்ளனர். இந்தநிலையில் நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால், சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, விபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்து வெலிங்டன் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் பிருந்தாவன் பாலம் பகுதியில் பிற இடங்களில் இருந்து வந்த வாகன ஓட்டிகளை சாலையோரம் நிறுத்தி, மலைப்பாதையில் அதிவேகமாக செல்லக்கூடாது, வளைவில் வாகனங்களை முந்தக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். மேலும் ஆவணங்களை சரிபார்த்தனர்.


Next Story