போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சத்திரமனை கிராமத்தில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஏட்டு வெண்ணிலா ஆகியோர் பொதுமக்களிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினா். அப்போது அவர்கள் பேசுகையில், குழந்தை திருமணத்தை தடுத்தல், கிராமப்புறங்களில் வசிக்கும் பள்ளி பயிலும் மாணவ-மாணவிகள் தன்னிச்சையாக கிணறு, குட்டைகளில் குளிக்க செல்லக்கூடாது, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் உங்கள் பகுதியில் யாரேனும் சிறு குழந்தைகள் வேலைக்கு சென்றால், அவர்கள் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும், என்றனர். மேலும் அவா்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் 181 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா்.


Next Story