போலீசார் விழிப்புணர்வு பேரணி
போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினா்
மானாமதுரையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி போலீசார் விழிப்புணர்வு பேரணி சென்றனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு, கண்ணன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் செய்களத்தூர் பாலிடெக்னிக் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரும், 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பங்கேற்றனர்.
இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று மகளிர் போலீஸ் நிலையம் வரை சென்றது. இதையடுத்து ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் இனிப்பு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுரை வழங்கினார்.
இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி ராஜா, பாலசதிஸ் கண்ணன், ஜெயமாரி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகிமை தாஸ், கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.