ஆவடியில் வியாபாரிகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம்


ஆவடியில் வியாபாரிகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம்
x

ஆவடியில் வியாபாரிகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரிகளின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுல்லைவாயல், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், செங்குன்றம், கொரட்டூர், மணலி புதுநகர், மீஞ்சூர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 180 வியாபாரிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல், போலீசாரின் ரோந்து பணியை அதிகரித்தல், புறக்காவல் நிலையம் அமைத்து காவலர்களை நியமித்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற தேவைகளை தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் கமிஷனரிடம் வழங்கினர். வியாபாரிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உறுதியளித்தார்.

கூட்டத்தில் போலீஸ் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார், ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story