பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி தயாரித்தது குறித்து போலீசில் புகார்


பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி தயாரித்தது குறித்து போலீசில் புகார்
x

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி தயாரித்தது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

கருப்பூர்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 14-ந் தேதி செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதில் முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களில் சாதி தொடர்பான கேள்வி ஒன்று இடம் பெற்று இருந்தது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 4 பதில்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பதிலை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த வினாவுக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் மீதும், வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 5-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்த பின்னர் வழக்குப்பதிவு செய்திட சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story