அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார்


அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார்
x

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் 38 வயதான உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் தவறான செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை தொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் மனுவை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தலைமையாசிரியர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story