நாயை அரிவாளால் வெட்டிய நபர் மீது போலீசில் புகார்
நாயை அரிவாளால் வெட்டிய நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
நாயை அரிவாளால் வெட்டிய நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடியை அடுத்த பெரியகுரும்பத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50), பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வீட்டில் நாய் ஒன்று வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த நாயை அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அரிவாளை எடுத்து வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயமடைந்து துடிதுடித்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாய் உரிமையாளர் இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story