திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு பணி
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம், தண்டவாளம் போன்ற இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயிலில் சோதனை
காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் தலைமை காவலர்கள் சங்கீதா, மதியழகன், இருப்புப் பாதை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், ஆகியோர் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.அப்போது பாதுகாப்பான பயணத்துக்கு ரெயில்வே துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பயணிகளும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் பயணிகளிடம் கேட்டுக்கொண்டனர்.