போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x

ஆற்காட்டில் போதைப்பொருள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்தும், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் ஆற்காட்டில் உள்ள பொது மக்களுக்கு, போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story