220 லிட்டர் எரிசாராயத்தை தீ வைத்து அழித்த போலீசார்


220 லிட்டர் எரிசாராயத்தை தீ வைத்து அழித்த போலீசார்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை தீ வைத்து போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 220 லிட்டர் எரிசாராயத்தை அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் கோட்ட கலால் அலுவலர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 220 லிட்டர் எரி சாராயத்தை உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் கொட்டி தீ வைத்து அழித்தனர்.


Next Story