சென்னையில் 800-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்த போலீசார்..!


சென்னையில் 800-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்த போலீசார்..!
x

சென்னை அண்ணாநகரில் 862 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் 862 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

சென்னை நியூ ஆவடி சாலை பகுதியில் உள்ள பெட்டி கடை ஒன்றில், மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், 862 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் நிம்மி என்பவரை கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்தனர்.

1 More update

Next Story