மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே மிளகாய் பொடியை தூவி மாமனாரை தாக்கி மருமகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவரது மகள் ஹேமமாலினி (வயது 23). இவர், தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள கிராம தபால் நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். ஹேமமாலினியும், பெரியகுளம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (27) என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயராமன், தனது மகளை எருமலைநாயக்கன்பட்டிக்கு தினமும் அழைத்து சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் வீட்டிற்கு வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் வழக்கம்போல் எருமலைநாயக்கன்பட்டிக்கு ெஜயராமன், மகளுடன் வந்தார். அவரை தபால் நிலையத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரை சூரியபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 8 பேர் வழிமறித்தனர். மேலும் அவர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதில், காயமடைந்த ஜெயராமன் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஜெயபிரகாஷ், அவரது தந்தை ராஜாமுத்து, தாய் பாண்டியம்மாள் மற்றும் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.