போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x

விழுப்புரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயில்வே சொத்துகளை பாதுகாக்கும் வகையில் தெற்கு ரெயில்வே உத்தரவின்படி அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலமாக உள்ளதை பொதுமக்கள் அறிந்திடும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பாக ரெயில் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் நேற்று காலை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து துப்பாக்கி ஏந்தியவாறு விழுப்புரம் நகரில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.


Next Story