போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x

போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி நடந்த இந்த கொடி அணிவகுப்பில் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தா.பழூர் சாலையில் தொடங்கி முக்கிய வீதிகள், அண்ணா சிலை வழியாக சிதம்பரம் சாலை வரை அணிவகுத்து சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயங்கொண்டம் சண்முகசுந்தரம், உடையார்பாளையம் வேலுச்சாமி, ஆண்டிமடம் முத்துக்குமார், தா.பழூர் கதிரவன், மீன்சுருட்டி பெரியசாமி, மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், நடேசன், ரவிச்சந்திரன், முருகன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story